சிஏஏ போராட்டம் – பெண்களை குறி வைக்கும் அரசு!

Share this News:

காஞ்சிபுரம் (29 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலப் போராட்டம் நடத்திய பெண்கள் கைது செய்யப் பட்ட நிலையில் தற்போது சுவரில் ஓவியம் வரைந்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகின்றன. இந்தப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவளித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக துண்டுப்பிரசுரம் விநியோகித்தாலும், கோலம் போட்டு எதிர்ப்பை பதிவு செய்தாலும் வழக்குத் தொடரப்பட்டு வருகின்றன.

இது இப்படியிருக்க குடியுரிமை திருத்தச் சட்டத்தினை திரும்பப் பெற வலியுறுத்தியும், கல்வி, வேலைவாய்ப்பு வேண்டும் எனக் கோரியும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் சார்பில் திருச்சியில் மாநாடு நடத்தவுள்ளனர்.

இந்த மாநாட்டை விளக்கி, காஞ்சிபுரம் மாவட்டம் பழைய ரயில் நிலையம் அருகே சுவர் விளம்பரம் செய்த மக்கள் அதிகாரத்தை சேர்ந்த இரு பெண்களை போலிஸார் கைது செய்துள்ளனர். போலிஸாரின் இத்தகைய நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.


Share this News:

Leave a Reply