தமிழ்நாட்டு ஆளுநர் மாற்றமா? – ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!

Share this News:

சென்னை (18 ஜன2023): தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார்.

தமிழ்நாடு மக்கள் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக, திமுக அரசு ஆளுநர் மீது குற்றம் சாட்டி வருகிறது.

கடந்த 12-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த திமுக குழு, 20 நிமிடங்கள் அவருடன் பேசியது. பின்னர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் சார்பில் புகார் மனு குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட்டது.

இதே போன்று, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு ஆளுநர் என்.ரவி இன்று மீண்டும் 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.

டெல்லி செல்லும் கவர்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


Share this News:

Leave a Reply