13 வயது மாணவியை கர்ப்பமாக்கிய வளர்ப்புத் தந்தை!

Share this News:

கோவை (27 ஜன 2023): 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய, வளர்ப்பு தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவையை சேர்ந்த 13 வயது மாணவி, அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியின் தந்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதனால், சிறுமியின் தாய் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விமல் (வயது 35) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மாணவியின் தாய் கூலி வேலை செய்து வருகிறார். அவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் அந்த மாணவியை வளர்ப்புத் தந்தையான விமல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

இதனால் நடந்த சம்பவம் பற்றி மாணவி தன் தாயிடம் சொல்லாமல் இருந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விமல், மாணவியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதன் காரணமாக, மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே மாணவியை, அவரது தாய் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதனை செய்த போது, மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இது பற்றி விசாரித்த போது மாணவியை வளர்ப்புத் தந்தையான விமல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் பேரூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வளர்ப்பு தந்தை விமலை கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 13 வயது மாணவியை வளர்ப்பு தந்தை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply