அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதாக உலா வரும் போலி செய்தி!

Share this News:

சென்னை (18 பிப் 2020): அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதாக ஒரு போலி செய்தி ஒன்று உலா வருகிறது.

குடியுரிமை சட்டம் எதிர்ப்பு போராட்டம் வலுபெற்றுள்ள நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் ஜெயா பிளஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி போல் போட்டோ ஷாப் செய்தி ஒன்று உலா வருகிறது. “அதில் குடியுரிமை சட்டம் அனைத்து மதத்தினருக்குமானது. திமுக தவறான பிரச்சாரம் செய்கிறது” என்பதாக அந்த செய்தி உள்ளது.

ஆனால் ஜெயா பிளஸ் அந்த செய்தியை மறுத்துள்ளது. மேலும் இது போலியான செய்தி என்பதாகவும் அது தகவல் வெளியிட்டுள்ளது.

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தை திசை திருப்ப சில விஷமிகள் இதுபோன்ற தகவல்களை பரப்பி வருகின்றனர்.


Share this News:

Leave a Reply