தேர்தல் முடிவுகள் – அதிர்ச்சியில் திமுக!

Share this News:

புதுக்கோட்டை (11 ஜன 2020): மறைமுக தேர்தலில் புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவியில் திமுக தோல்வியடைந்துள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய குழுத்தலைவர், ஒன்றிய குழுத் துணைத் தலைவர், பஞ்சாயத்துத் தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் இன்று காலை தொடங்கிய நிலையில் நடைபெற்று வருகிறது. மறைமுக தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர், துணைத் தலைவர் விவரங்களை அறிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட கவுன்சிலரில் திமுக 13 இடங்களையும், அதிமுக 9 இடங்களையும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கைப்பற்றினர். புதுக்கோட்டை மாவட்ட கவுன்சிலரில் திமுக 13 இடங்களை கைப்பற்றிய நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அதிமுகவின் ஜெயலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் கலைவாணி தோல்வி அடைந்துள்ளார்.

இதனையடுத்து திமுக கூட்டணி அதிக உறுப்பினர்களை வைத்திருந்த நிலையில் திடீர் திருப்பமாக அதிமுகவை சேர்ந்த ஜெயலட்சுமி எப்படி வெற்றி பெற்றார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதன் பின்பு மறைமுக தேர்தலில் அதிமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி, திமுகவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையர் பழனிச்சாமியிடம் புகார் அளித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply