சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்களை பதிவிட்டவர்கள் யார் யார்? – நீதிமன்றம் உத்தரவு!

Share this News:

சென்னை (22 ஜன 2020): “சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துக்களை பதிவு செய்த 10 பேரின் பெயர் பட்டியலை இன்றே அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்!” என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக கருத்துகளை ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இவ் விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். இதையடுத்து அவர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது “சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்களை பதிவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துக்களை பதிவிட்ட 10 பேரின் பெயர் பட்டியலை இன்றே அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply