சிஏஏவை எதிர்த்து சட்டமன்றம் முற்றுகை – தமிழகம் முழுவதும் ஒரே நாளில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!

Share this News:

சென்னை (17 பிப் 2020): குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்த அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக அமைதி வழியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராகவும் பிப்.19ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

அதே தினத்தில் மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜமாத்துல் உலமா சபை உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.


Share this News:

Leave a Reply