சீமான் தினகரன் கட்சிகளுக்கு கடும் பின்னடைவு!

Share this News:

சென்னை (02 ஜன 2020): ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டு வரும் நிலையில் நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் பின்னடைவை சந்தித்துள்ளன.

மதியம் 1 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 515 மாவட்ட உள்ளாட்சி வார்டு உறுப்பினர் இடங்களில் 113 இடங்களின் முன்னிலை நிலவரம் தெரிந்தது. இதில் 66 இடங்களில் தி.மு.க. முன்னிலை பெற்றிருந்தது.

அ.தி.மு.க. 47 இடங்களில் முன்னிலை பெற்று 2-வது இடத்தில் இருந்தது. சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு மிக கடுமையான தோல்வியும், பின்னடைவும் ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய அமைப்புகளைப் பொருத்தவரை தமிழகத்தில் மொத்தம் 5067 ஒன்றிய உள்ளாட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்கள் உள்ளன. மதியம் 1 மணி நிலவரப்படி 139 இடங்களின் முன்னிலை நிலவரம் தெரிந்தது.

ஒன்றியங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றனர். 80 இடங்களில் அ.தி.மு.க. முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்ட தி.மு.க. 53 இடங்களில்தான் முன்னிலை பெற்றிருந்தது. அ.ம.மு.க. 3, மற்ற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தன.

2 மணி நிலவரப்படி மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி முந்தியது. திமுக வேட்பாளர்கள் 80 இடங்களில் முன்னிலையில் இருந்தனர். அதிமுக வேட்பாளர்கள் 78 இடங்களில் முன்னிலை பெற்றனர்.

ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களைப் பொருத்தவரை, அதிமுக கூட்டணி 180 இடங்களிலும், திமுக கூட்டணி 182 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தன.

உள்ளாட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்களில் இன்னும் ஏராளமான இடங்களின் முன்னிலை தெரிய வேண்டியதுள்ளது. எனவே அ.தி.மு.க., தி.மு.க. இடையே முன்னிலை நிலவரம் மாறவும் வாய்ப்புள்ளது.

இன்று நள்ளிரவு வரை வாக்குகள் எண்ணும் பணி நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 8 மணிக்குப் பிறகே பெரும்பாலான இடங்களில் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.


Share this News:

Leave a Reply