அதிமுகவில் அடுத்த விக்கெட் – திமுகவின் பந்து வீச்சில் கிளீன் போல்ட்!

Share this News:

சென்னை (24 பிப் 2020): அதிமுகவில் இருந்து விலகிய ராஜ கண்ணப்பன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ஏற்கனவே அறிவித்தபடி மதுரையில் ஸ்டாலின் தலைமையில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த ராஜ கண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.

ராஜ கண்ணப்பட்ன் திமுகவில் இணைந்தது குறித்து செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இதுகுறித்து செல்லூர் ராஜூ கூறியதாவது, ராஜ கண்ணப்பன் தமிழகத்தில் செல்லாத நோட்டாகிவிட்டார். அவர் முன்பு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். இப்போது அதிமுகவில் இருந்து செல்லாமல் போனதால் மீண்டும் திமுகவுக்குச் செல்கிறார். என்று தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply