பாஜகவில் விழும் அடுத்தடுத்த விக்கெட்டுகள் – மேலும் ஒரு தலைவர் பாஜகவிலிருந்து விலகல்!

Share this News:

சென்னை (10 டிச 2022): தமிழக பாஜகவில் நிலவி வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் அக்கட்சியில் உள்ள பலரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களில் மட்டும் முக்கியமான பொறுப்புகளில் இருந்த பாஜக நிர்வாகிகள் விலகி, தாங்கள் முன்பு இருந்த கட்சிகளிலேயே சேர்ந்து வருகின்றனர்.

திமுக முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம், பாஜகவில் இருந்து மீண்டும் திமுகவிலேயே சரண்டர் ஆகி, அங்கும் முக்கிய பதவியைப் பெற்றிருக்கிறார்.

பாஜக பொருளாதார அணியின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த மதுரையைச் சேர்ந்த முனியசாமி, சென்னையில் கமல்ஹாசனைச் சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். இவர் ஏற்கெனவே மக்கள் நீதி மய்யத்திலிருந்துதான் பா.ஜ.கவுக்கு சென்றவர்.

அதேபோல, மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் நிறுவன பொதுச்செயலாளர் அருணாச்சலம், கமல்ஹாசனை நேற்று நேரில் சந்தித்து மீண்டும் அக்கட்சியில் இணைந்தார்.

அருணாச்சலம் 2020-ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply