அதிராம்பட்டினத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம்!

Share this News:

அதிராம்பட்டினம் (09 டிச 2022): அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரையில் வியாழன் அன்று திடீரென கடல் உள் வாங்கியதால் கரையோரம் வாழும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரையில் கடல் 200 மீட்டர் தூரம் உள்வாங்கியது. கடந்த கஜா புயலின்போதும் இதேபோல கடல் உள் வாங்கியது, மேலும் கடல் நீர் பெருக்கெடுத்து துறைமுக வாய்க்கால் வழியாக குடியிருப்பு பகுதிகளுக்குள் சூழ்ந்து வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது.

தற்போது மழை புயல் காலமாதலால் கடல் நீர் பெருக்கெடுத்து துறைமுக வாய்க்காலை எட்டியுள்ளதால் மீண்டும் கஜா புயல் போல் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் கரையோரம் வசிக்கும் மக்கள் உள்ளனர்.


Share this News:

Leave a Reply