பிரபல தமிழ் நடிகர் இயக்குநர் ராஜ்கபூரின் மகன் மெக்காவில் மரணம்!

Share this News:

மெக்கா (17 பிப் 2020): பிரபல நடிகர் இயக்குநர் மகன் ஷாருக் கபூர் (23) மெக்காவில் உடல் நலக்குறைவால் மரணம்.

நடிகர் பிரபு கனகா நடித்த தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்கபூர். நடிகர் அஜித் நடித்த அவள் வருவாளா, ஆனந்தப் பூங்காற்றே ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்

இயக்குநர் மட்டுமின்றி நடிகராகவும் உள்ளார் ராஜ் கபூர். ஆனந்த பூங்காற்றே, தாஜ்மகால், ஏழையின் சிரிப்பில், மாயி, வாஞ்சினாதன், தென்னவன், விசில், அய்யா, ஆறு, அரண்மனை 2, வாகா, கொடி, மாயாண்டி குடும்பத்தார், முத்தக்கு முத்தாக உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ராஜ்கபூரின் மனைவியும் அவரது மகன் ஷாரூக் கபூரும் மெக்காவுக்கு உம்ரா பயணம் மேற்கொண்டிருந்தனர். அங்கு கடுமையான சளி மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட ஷாரூக் கபூர் அங்கேயே உயிரிழந்திருக்கிறார். இச்சம்பவம் ராஜ்கபூர் மற்றும் அவரது குடும்பத்தினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கிடையே அவரது உடலை அடக்கம் மெக்காவில் அடக்கம் செய்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இதன அடுத்து நடிகர் ராஜ்கபூர், மற்றும் அவரது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை காலையில் மெக்காவுக்கு செல்ல உள்ளதாகக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share this News:

Leave a Reply