தெலுங்கானா முதல்வருக்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி!

ஐதராபாத் (11 மார்ச் 2022): தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சோமாஜிகுடாவில் உள்ள யசோதா மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரும் கடந்த இரண்டு நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இடது கை வலி காரணமாக அவர் அவதிபட்டதாக தெரிகிறது. முதற்கட்ட பரிசோதனைக்குப் பிறகு மருத்துவர்களால் ஆஞ்சியோகிராம் மற்றும் சி.டி ஆகியவற்றிற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். சோதனை முடிவில் முதலமைச்சரின் உடல்நிலை குறித்த இறுதி அறிக்கை ஊடகங்களுக்கு வெளியிடப்படும். அவருடன் அவரது மனைவி ஷோபா,…

மேலும்...

பிரணாப் முகர்ஜி உடல் நிலை – ராணுவ மருத்துவமனை தகவல்!

புதுடெல்லி (27 ஆக 2020): முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நிலைய்யில் முன்னேற்றம் இல்லை என்றும் அவர் ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாகவும் டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. பிரணாப் முகர்ஜி, கடந்த 9-ந்தேதி உடல்நலக்குறைவால் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பிரணாப் முகர்ஜி நினைவிழந்து ஆழ்ந்த கோமா நிலையில் இருப்பதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை…

மேலும்...

96 வயது விடுதலை போராட்ட போராளி விரைவில் டிஸ்சார்ஜ்!

சென்னை (21 ஆக 2020): உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு விரைவில் வீடு திரும்புகிறார். நல்லகண்ணுக்கு நேற்று இரவு திடீரென்று அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது உடனே அவருடைய பேரன் நள்ளிரவிலேயே அவரை சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் அனுமதித்தார். மேலும், இன்று காலை அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. பிற்பகலில் அந்தப் பரிசோதனை முடிவு வந்தபோது அவருக்கு எந்தத்…

மேலும்...

பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை குறித்து ராணுவ மருத்துவமனை தகவல்!

புதுடெல்லி (20 ஆக 2020): முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த வாரம் பிரணாப் முகர்ஜி (84) மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றபோது, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில், அவருக்கு மூளையிலிருந்த ரத்த உறைவு காரணமாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக ஏற்கனவே…

மேலும்...

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை (25 மே 2020): அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நேற்றிரவு சென்னை தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் திடீரென அனுமதிக்கப்பட்டார்.. ஆஞ்சியோ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. டாக்டர்கள் அவருக்கு தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டனர். நேற்றிரவு ஆஞ்சியோ சிகிச்சை முடிந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மருத்துவமனைக்குச் சென்று துணை முதல்வரை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.. ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ள…

மேலும்...

வீடு திரும்பினார் மன்மோகன் சிங்!

புதுடெல்லி (12 மே 2020): உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று வீடு திரும்பினார். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், திடீர் உடல் நலக் குறைவால், ஞாயிறு இரவு டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில், மன்மோகனுக்கு பாதிப்பு இல்லையென உறுதியானது. அவரது உடல்நிலை சீரானதை அடுத்து இன்று (மே 12) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...

க. அன்பழகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் பலனில்லை – ஸ்டாலின் விளக்கம்!

சென்னை (06 மார்ச் 2020): திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு அளிக்கப்படும் தீவிர சிகிச்சையில் பலனில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். க.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நிலை குறித்து நேரில் விசாரிக்க சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர…

மேலும்...

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்!

சென்னை (28 பிப் 2020): திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 97 வயதாகும் க.அன்பழகன் மூச்சுத் திணறல் பிரச்னையால், கடந்த 24-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அன்பழகனுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும், புதன் கிழமை இரவு முதல் அவர் கண் திறக்கவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், கவலைக்கிடமான…

மேலும்...

சோனியா காந்தி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (02 பிப் 2020): காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சோனியா காந்தி காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...