பிரணாப் முகர்ஜி உடல் நிலை – ராணுவ மருத்துவமனை தகவல்!

Share this News:

புதுடெல்லி (27 ஆக 2020): முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நிலைய்யில் முன்னேற்றம் இல்லை என்றும் அவர் ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாகவும் டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பிரணாப் முகர்ஜி, கடந்த 9-ந்தேதி உடல்நலக்குறைவால் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பிரணாப் முகர்ஜி நினைவிழந்து ஆழ்ந்த கோமா நிலையில் இருப்பதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நுரையீரல் தொற்று பிரச்சினை மற்றும் சிறுநீரக செயலிழப்பு இருப்பதால் அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply