திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்!

Share this News:

சென்னை (28 பிப் 2020): திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

97 வயதாகும் க.அன்பழகன் மூச்சுத் திணறல் பிரச்னையால், கடந்த 24-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

அன்பழகனுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும், புதன் கிழமை இரவு முதல் அவர் கண் திறக்கவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று, அன்பழகனின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகிறார் மு.க.ஸ்டாலின். மேலும் தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.


Share this News:

Leave a Reply