குற்றாலம் திருக்குற்றால நாதர் சுவாமி கோயில் திருவிழா!

Share this News:

குற்றாலம் (10 ஜன 2020): தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக்குற்றால நாதர் சுவாமி கோயில் திருவாதிரை திருவிழா ஜனவரி 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானதும் அருள்மிகு நடராஜர் திரு தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை அமையப்பெற்ற திருக்குற்றாலத்தில் அருள்மிகு நடராஜப் பெருமானுக்கு நடைபெறும் சிறப்பு மிக்கதுமான மார்கழி திருவாதிரை திருவிழா ஜனவரி ஒன்றாம் தேதியன்று விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் நாள்தோறும் காலை மாலையில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. விழாவின் எட்டாம் நாளன்று குற்றாலம் சித்திர சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 3.20 மணிக்கு சித்திர சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது.


Share this News:

Leave a Reply