ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

Share this News:

துபாய் (09 பிப் 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப் பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக ஆரோக்கிய அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் (UAE Ministry of Health and Prevention (MoHAP)) ஏற்கனவே ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ஆக இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு நோயாளி சீனாவை சேர்ந்தவர், மற்றொருவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சீனாவை சேர்ந்தவர்கள்.

இதற்கிடையே கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஐக்கிய அரபு அமீரக ஆரோக்கிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply