தந்தையின் கொலை வழக்கில் முதல்வர் மீது அவரது சகோதரி புகார்!

Share this News:

ஐதராபாத் (30 ஜன 2020): ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன ரெட்டி மீது அவரது சகோதரி புகார் அளித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவும் மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் தம்பியுமான விவேகானந்த ரெட்டி கடந்த வருடம் மார்ச் மாதம், அதாவது ஆந்திர சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகத் தன் வீட்டில் பல்வேறு வெட்டுக் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

அப்போது எதிர் கட்சி வரிசையில் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி இந்த கொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால் தேர்தல் நேரமானதால் அதனை சந்திரபாபு நாயுடு அரசு கண்டு கொள்ளவில்லை.

இதற்கிடையில் ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தன் சித்தப்பா கொலை விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அப்படி எதுவும் செய்யாமல் மீண்டும் வேறு ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார். ஜெகன்மோகன் ரெட்டி நியமித்திருந்த போலீஸ் குழுவிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் கோபமடைந்த விவேகானந்த ரெட்டியின் மகளும் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான சுனிதா நாரெட்டி, தன் தந்தை கொலை வழக்கில் நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

மேலும், இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த சுனிதா, தந்தை கொலை வழக்கில் தன் உறவினர்கள் மீது சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில் அவர்களில் ஜெகன்மோகன் ரெட்டியும் அடக்கம். ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகப் பதவியேற்ற பிறகு, எதற்காகத் தன் தந்தை கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சுனிதாவின் பேட்டி ஜெகன்மோகன் ரெட்டிக்கு மேலும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply