மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மரணம்!

Share this News:

கொச்சி (09 பிப் 2020): மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் பி.பரமேஸ்வரன் காலமானார்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஏற்படுத்தியவர்களில் ஒருவர் பரமேஸ்வரன், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி உள்ளிட்டவர்களுடன் இணைந்து பாரதீய ஜனசங் அமைப்பில் தலைவராக இருந்தவர் பரமேஸ்வரன்.

இந்நிலையில் தனது 91 வது வயதில் வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் உயிரிழந்தர்.

கேரளாவில் ஆலப்புழாவில் பிறந்த இவரது உடல் கொச்சியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரமேஸ்வரன் பத்மஶ்ரீ, பத்ம விபூஷன் விருதுகள் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply