விபச்சார விடுதியாக செயல்பட்ட பாஜக தலைவர் மகனின் ரிசார்ட்!

Share this News:

ரிஷிகேஷ் (27 செப் 2022): உத்தரகாண்ட் மாநிலத்தில் இடிக்கப் பட்ட பாஜக தலைவர் மகனின் ரிசார்ட் விபச்சார விடுதியாக செயல்பட்டதாக அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தரகான்ட் மாநிலம் ரிஷிகேஷ் அருகே செயல்பட்டு வந்த பா.ஜ., தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யாவின் ரிசார்ட்டில் பணிபுரிந்த ரிஷப்ஷனிஸ்ட் அங்கிதா பண்டாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்நிலையில் விபச்சாரத்திற்கு விரும்பாததால் அவர் கொலை செய்யப்பட்ததாக எழுந்த புகாரை அடுத்து வினோத் ஆர்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யாவின் ரிசார்ட் மீது, முன்னாள் ஊழியர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்த ரிசார்ட் விபச்சாரம் மற்றும் போதைப்பொருட்களின் மையமாக இருந்ததாக ரிசார்ட் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஊழியர்களின் குற்றச்சாட்டுகளை தேசிய ஊடகமான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியாக வெளியிட்டுள்ளது.

புல்கித் ஆர்யா, ரிசார்ட் ஊழியர்களை மனரீதியாக சித்திரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இங்கிருந்து தப்பிக்க நினைப்பவர்களை திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் சிக்க வைக்கும் முயற்சி நடந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ரிசார்ட்டின் முன்னாள் ஊழியர்கள் அளித்த வாக்குமூலங்களும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையே ரிசார்ட் ரிஷப்ஷனிஸ்ட் அங்கிதா பண்டாரி கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக புல்கித் ஆர்யா , ரிசார்ட் மேலாளர் சவுரப் பாஸ்கர், உதவியாளர். மேலாளர் அங்கித் குப்தா உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஆனால் இச்சம்பவத்திற்கு பின், ரிசார்ட்டை அதிகாரிகள் அவசரமாக புல்டோசர் கொண்டது இடித்துத் தள்ளினர். ரிசார்ட்டில் இருந்த ஆதாரங்களை அழிப்பதற்காக ரிசார்ட் இடிக்கப்பட்டுள்ளதாக அங்கிதா பண்டாரி குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட அங்கிதாவின் இறுதி பிரேத பரிசோதனை அறிக்கையை ரிஷிகேஷ் எய்ம்ஸ் அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் என்ன உள்ளது என்பதை போலீசார் வெளியிடவில்லை. இதற்கிடையில், அங்கிதாவின் உடலில் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான சில அடையாளங்கள் இருந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து காவல்துறை அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கவில்லை.


Share this News:

Leave a Reply