ரூபாய் நோட்டில் லட்சுமி படம் – சுப்பிரமணியன் சாமி அட்வைஸ்!

Share this News:

சென்னை (16 ஜன 2020): இந்திய ரூபாய் நோட்டிகளில் லட்சுமியின் படம் அச்சிட தான் ஆதரவு தெரிவிப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்,

அவ்வப்போது ஏதாவது சொல்லி மக்களை திசை திருப்புதில் எச்.ராஜாவுக்கு பிறகு முன்னணி வகிப்பவர் சுப்பிரமணியன் சாமி. அது கேட்பவர்களுக்கு ஏதோ மாதிரி இருந்தாலும், இதுதான் அவரது தொடர் வேலை.

இந்நிலையில்தான் மக்களை திசை திருப்ப இன்னொரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதாவது, இந்தோனேசிய நாட்டு கரன்சியில், விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளதாகவும், விநாயகர் தடைகளை நீக்குபவர் என்றும், இதை கருத்தில் கொண்டு, இந்திய ரூபாய் நோட்டிகளில் லட்சுமியின் படம் அச்சிட தான் ஆதரவு தெரிவிப்பதாகவும், இதுகுறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் குடியுரிமை திருத்தம் சட்டத்தில் ஆட்சேபனைக்குரியது எதுவுமில்லை என்றும் காங்கிரஸ் கட்சியும் ,மகாத்மா காந்தியும் இதையே (சி.ஏ.ஏ) கோரின என்றும் தெரிவித்தார். மன்மோகன் சிங் 2003 ல் நாடாளுமன்றத்திலும் இதனை நிறைவேற்ற வேண்டும் என்று கோரினார். அதை ஆளும் பாஜக அரசு செய்துள்ளது


Share this News:

Leave a Reply