இந்துத்துவாவினர் நடத்திய ஊர்வலத்தில் மசூதி, முஸ்லிம் வீடுகள் மீது கல் வீசி தாக்குதல்!

Share this News:

பெங்களூரு (15 மார்ச் 2023): கர்நாடகாவில் மசூதி, வீடுகள், உருது பள்ளி மற்றும் வாகனங்கள் மீது கல் வீச்சில் ஈடுபட்ட இந்துத்துவவாதிகள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் ஹாவேரியில் மசூதிகள், வீடுகள், பள்ளிகள் மீது கற்கள் வீசப்பட்டன. இந்துத்துவா அமைப்புகள் மற்றும் குருபா சமூக அமைப்புகள் நடத்திய ஊர்வலத்தின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. 15 பேர் கைது செய்யப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்துத்துவா அமைப்பினர் செவ்வாய்க்கிழமை சங்கொலி ராயண்ணா சிலையுடன் பைக் பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். பேரணி முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி வழியாக சென்றபோது, ​​அவர்களில் சிலர் வீடுகள், மசூதிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மீது கற்களை வீசினர்.

லாரி, கார் மற்றும் பைக்குகள் உட்பட பல வாகனங்களை அடித்து நொறுக்கிய பின்னர், இந்துத்துவவாதிகள் உருது பள்ளி மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்

ஆட்டோ ஓட்டுநரையும் தாக்கிய கும்பல், அவரது வாகனத்தை அடித்து நொறுக்கியது. மோதல் தீவிரமடைந்ததையடுத்து, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இது குறித்து ஹாவேரி காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் கூறுகையில், பைக் பேரணி அமைதியாக நடந்ததாகவும், ஆனால் மசூதியை அடைந்தபோது, ​​வழிபாட்டுத் தலத்தின் மீது சில மர்மநபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார்.

ஊர்வலத்தின் போது போலீசார் குவிக்கப்பட்டனர். எனவே உடனடியாக நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் அந்த இடத்தில் குவிக்கப்பட்டதால், குற்றவாளிகளை அடையாளம் காண்பது எளிதாகிவிட்டது என்று எஸ்பி கூறினார்.

இதனிடையே பேரணியின் போது கற்களை வீசியவர்கள் யாராக இருந்தாலும் அது தவறு என்றும், காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேளாண் துறை அமைச்சர் பி.சி. பாட்டீல் கூறினார். இதேவேளை, செவ்வாய்கிழமை கல் வீச்சு சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கூறுகையில், வன்முறைக்கு இடம் கொடுக்காமல் சுமுகமாக பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். போலீசார் அமைதியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், சட்டத்தை மீறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.


Share this News:

Leave a Reply