இணையத்தில் பரவிய அந்தரங்க படங்கள் – விஸ்வரூபம் எடுக்கும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் சண்டை!

Share this News:

பெங்களூரு (20 பிப் 2023): கர்நாடகாவில் ஐபிஎஸ் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் அரசுக்க்க் தலைவலியாக மாறியுள்ளது.

டி.ரூபா ஐபிஎஸ் மற்றும் ரோகினி சிந்துரி ஐஏஎஸ் இடையேயான தகராறு, அந்தரங்க புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் பரவும் அளவுக்கு நிலமை மோசமாகியுள்ளது.

மைசூரில் எம்எல்ஏ சாரா மகேஷுடன் ரோகினி சிந்துரி இருக்கும் படத்தை டி ரூபா வெளியிட்டதை அடுத்து இருவருக்கும் பிரச்சனை சூடு பிடித்தது.

மைசூர் துணை கமிஷனராக இருந்தபோது கால்வாயை ஆக்கிரமித்து எம்எல்ஏ மாநாட்டு மையம் கட்டப்பட்டதாக எம்எல்ஏவுக்கு எதிராக ரோகிணி சிந்துரி புகார் அளித்திருந்தார். எம்எல்ஏ மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு நிலுவையில் சிந்தூரி எம்.எல்.ஏவுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது எடுத்த படம் என்று அதனை ரூபா வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ரோகினி சிந்துரி, அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என்றும், ரூபா மனநிலை பாதிக்கப்பட்டது போல் நடந்து கொள்கிறார் என்றும் கூறினார்.

இதற்கிடையில், ரோகினி சிந்துரியின் சில தனிப்பட்ட படங்களை டி.ரூபா சமூக ஊடகங்கள் மூலம் வெளியிட்டார். மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ரோகினி சிந்துரி அனுப்பிய படங்கள் என்று கூறி சமூக வலைதளங்களில் ஏழு படங்களை பகிர்ந்துள்ளார் ரூபா. அந்த அதிகாரிகளின் பெயர்களை வெளியிட வேண்டும் என்றும் ரோகினி சிந்துரி கோரிக்கை விடுத்துள்ளார்.

எல்லை தாண்டிய ரூபா-ரோகிணி சண்டை கர்நாடக அரசுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இவ்விவகாரத்தில் கர்நாடக அரசு அவசரமாக தலையிட தயாராகி வருகிறது.


Share this News:

Leave a Reply