தைரியமிருந்தால் சாவர்கருக்கு பாரத ரத்னா கொடுத்துப்பாருங்கள் – பாஜகவை மிரட்டும் சிவசேனா!

Share this News:

புதுடெல்லி (04 பிப் 2020): மத்திய அரசுக்கு தைரியமிருந்தால் சாவர்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்துப்பாருங்கள் என்று சிவசேனா எம்பி விநாயக் ரௌத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய சிவசேனை எம்பி விநாயக் ரௌத் , “உங்களுக்கு தைரியம் இருந்தால், சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குங்கள். தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) சிவசேனை எதிர்க்கும்.

நீங்கள் எங்களுக்கு ஹிந்துத்வாவை கற்றுத் தர வேண்டாம். வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளை நாடு சந்தித்து வரும்போது, என்ஆர்சி விவகாரத்தை எழுப்பி மத்திய அரசு நாட்டை தவறாக வழிநடத்துகிறது. என்ஆர்சியை அமல்படுத்தினால் 35 கோடி இந்தியர்களை தடுப்பு காவல் மையங்களில் வைக்க வேண்டி இருக்கும்” என்றார்.


Share this News:

Leave a Reply