வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு வருகை புரிந்த பல்வேறு மத முக்கிய பிரமுகர்கள்!

Share this News:

கொச்சி (12 ஜன 2020): கேரளாவில் பல்வேறு மத முக்கிய பிரமுகர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் பெரிய ஜும்மா பள்ளிக்கு வருகை புரிந்தனர்.

ஜனவரி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொச்சி பெரிய ஜும்மா மசூதி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் நீதிபதி தேவன் ராமச்சந்திரன், நீதிபதி அலெக்‌சாண்டர் தாமஸ், சுவாமி குருரத்னம் ஞான தவசி, ஃபாதர் வில்சன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வெள்ளிக்கிழமை ஜும்மா சிறப்பு சொற்பழிவை கேட்டனர்.

பின்பு இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரமுகர்கள், “இது வாழ்வில் மிக முக்கிய தருணம் ஆகும். சிறப்பான முயற்சியும் ஆகும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இதனை செயல்படுத்த மசூதி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளமை வரவேற்க தக்கதாகும்” என்றனர்.

முஸ்லிம்களின் தொழுகை, மற்றும் வெள்ளிக்கிழமை ஜும்மா உரை எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை பிற மதத்தினரும் அறிந்து கொள்வதற்காக இந்த ஏற்பாட்டினை மசூதி நிர்வாகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply