பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கு; மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது!

Share this News:

புதுடெல்லி (17 டிச 2022): பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க குஜராத் அரசுக்கு அனுமதி அளித்து கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மஹராஷ்டிராவில் நடந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது பில்கிஸ் பானுவின் வாதம்.

இதனிடையே, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரையும் விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானோ தாக்கல் செய்த ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


Share this News:

Leave a Reply