ஷஹீன் பாக் வழக்கை இப்போதைக்கு விசாரிக்க முடியாது – உச்ச நீதிமன்றம் மறுப்பு!

shaheen-bagh
Share this News:

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் ஷஹீன் பாக் போராட்டம் தொடர்பான வழக்கை இப்போதைக்கு விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக்கில் 70 நாட்களையும் தாண்டி அமைதி வழியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஒரு பக்கம் கலவரம் நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஷாகீன் பாக் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மேலும் டெல்லியில் நடந்து வரும் கலவரமும் முடிவுக்கு வருமா? என்று தெரியவில்லை.

இந்நிலையில்தான் ஷஹீன் பாக் போராட்டக் காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ நந்த் கிஷோர் கார்க் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த போராட்டம் காரணமாக மக்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் அமித் ஷாணி, ஷாகீன் பாக் போராட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார்.

இன்று இந்த வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதிகள் சஞ்சய் கிஷான் கவுல் , கே எம் ஜோசப் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். அதில் டெல்லியில் நடக்கும் கலவரங்கள் துரதிஸ்டவசமானது. மிகவும் கொடூரமானது. போலீஸ் இந்த கலவரத்தை தடுக்கவில்லை. போலீஸ் தனது பணியை சரியாக செய்யவில்லை. ஷாகீன் பாக் வழக்கை இப்போது விசாரிக்க முடியாது. இது சரியான நேரம் இல்லை.என கூறிய நீதிபதிகள் ஹோலி பண்டிகைக்குப் பிறகு விசாரிப்பதாக வழக்கை ஒத்தி வைத்தனர்.


Share this News:

Leave a Reply