ஷஹீன் பாக் போராட்டம் குறித்து டெல்லி போலீசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

Share this News:

புதுடெல்லி (10 பிப் 2020): டெல்லி ஷஹீன்பாக்கில் நடக்கும் போராட்டம் குறித்து டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் ஷஹீன் பாக்கில் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து 60 நாட்களுக்கும் மேலாக இரவுபகலாக போராடி வருகிறார்கள்.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியது காவல்துறை பொறுப்பு. நாங்கள் உத்தரவிட முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, அமித்சஹானி என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அவர் தாக்கல் செய்த மனுவில், ஷாஹீன் பாக் பகுதியில் உள்ளவர்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு காவல் துறைக்கு உத்தரவிட கோரியிருந்தார். இம்மனு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் முன்பாக கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி தேர்தல் முடிந்து விசாரிப்பதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதி எஸ்.கே.கவுல் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்ேபாது நீதிதி எஸ்.கே.கவுல் கூறுகையில், எத்தனை நாளைக்குத்தான் பொது மக்கள் பயன்படுத்தும் சாலையை முடக்கி வைப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்றும், எத்தனை நாட்களுக்கு சாலையை முடக்கி வைப்பீர்கள் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கேள்வி எழுப்பினார்.

அதேவேளை போராட்டம் நடத்துவதற்கு இந்தியாவில் அனைவருக்கும் அனுமதி இருக்கிறது.

அதே சமயத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் தான் போராட்டம் என்பது நடத்தப்பட வேண்டும், மேலும் பொதுமக்களுக்கு இடையூறு வரும் இடங்களில் அனுமதியில்லாமல் நடக்கும் போராட்டங்களை நீதிமன்றம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்தனர். மேலும் போராட்டம் நடத்துவதற்கு என்று பொது இடத்தை ஒதுக்க அரசுக்கு அறிவுறுத்தி டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்து வழக்கை வருகின்ற 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து இருக்கிறார்கள்.


Share this News:

Leave a Reply