பணமதிப்பிழப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

Share this News:

புதுடெல்லி (27 செப் 2022): பணமதிப்பிழப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடத்துகிறது.

இந்த வழக்கை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும். இந்த மனுக்களை விரிவாக விசாரிக்கும் தேதியை நீதிமன்றம் நாளை அறிவிக்கவுள்ளது. டிசம்பர் 16, 2016 அன்று, இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டது, ஆனால் பெஞ்ச் இன்னும் அமைக்கப்படாததால் அது விசாரிக்கப்படாமல் இருந்தது.

நவம்பர் 8, 2016 அன்று பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் வெளியிடப்பட்டன. நோட்டுகளை மாற்ற வங்கிகள் முன்பு மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நின்றனர். கருப்பு பணத்தை ஒழிக்கவே நோட்டு தடை செய்யப்பட்டது என்பது அரசின் விளக்கம். ஆனால், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் என்னென்ன இழப்புகளைச் சந்தித்தது என்பதை அரசால் சரியாக விளக்க முடியவில்லை.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய தவறு என்றும், பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை அரசின் திட்டமிட்ட கொள்ளை என்று முன்னாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் கூறியதும் குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply