குடியரசு தினம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடி ஏற்றினார்!

Share this News:

புதுடெல்லி (26 ஜன 2020): குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார்.

நாட்டின் 71வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லி ராஜபாதையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். பிரேசில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ இந்த விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். போா் உள்ளிட்டவற்றில் உயிரிழந்த வீரா்களுக்கு இந்தியா கேட் பகுதிக்கு அருகிலுள்ள தேசிய போா் நினைவிடத்தில் பிரதமா் நரேந்திர மோடி மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

வழக்கமாக அமா் ஜவான் ஜோதி பகுதியிலேயே உயிரிழந்த வீரா்களுக்கு பிரதமா் அஞ்சலி செலுத்துவாா். ஆனால், முதல் முறையாக தேசிய போா் நினைவிடத்தில் பிரதமா் மோடி அஞ்சலி செலுத்தினார்.


Share this News:

Leave a Reply