பிரதமர் என்ற அந்தஸ்தை இழந்துவிட்டார் – மோடிக்கு ராகுல் பதிலடி!

Share this News:

புதுடெல்லி (07 பிப் 2020): ஒரு பிரதமர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நமது பிரதமருக்கு தெரியவில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவையில். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய பிரதமர் மோடி, ராகுல் காந்தியை மறைமுகமாக டியூப் லைட் என்று விமரிசித்திருந்தார்.

இது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு ராகுல் காந்தி தெரிவித்ததாவது:

பொதுவாகவே பிரதமர் என்றால் அவர்களுக்கு என ஒரு தனி அந்தஸ்து இருக்கும். பிரதமர் என்றால் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் என்று ஒன்று இருக்கும். உயர்ந்த நிலை இருக்கும். ஆனால், நமது பிரதமருக்கு அதுபோன்ற எதுவும் இல்லை. அவர் ஒரு பிரதமர் போல நடந்து கொள்ளவில்லை என்று  செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் கூறியுள்ளார்.

மேலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்க மறுக்கிறார்கள். எங்களது குரல்வளை நசுப்படுகிறது என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply