பாகிஸ்தானுடன் இணைந்து சீனா இந்தியாவை தாக்கும் – ராகுல் காந்தி எச்சரிக்கை!

Share this News:

புதுடெல்லி (26 டிச 2022): பாகிஸ்தானுடன் இணைந்து சீனா இந்தியாவை தாக்கும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த முன்னாள் ராணுவ வீரர்களுடனான கலந்துரையாடலில் பேசிய ராகுல் காந்தி, “இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ரணுவ வீரர்களுக்கும் இடையே கல்வான் மற்றும் டோக்லாம் பகுதியில் நடைபெற்ற மோதல்கள் ஒன்றுகொன்று தொடர்புடையவை.

தற்போது பாகிஸ்தானுடன் சீனா பொருளாதார உறவை மேம்படுத்தியுள்ளது. இந்தியாவை சீனா தாக்குதவற்கு பாகிஸ்தானுடன் கைகோர்க்கும், இந்தியாவுக்க்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

இந்தியாவில் இடையூறுகளும், சண்டைகளும், குழப்பங்களும் நம் நாட்டில் நிலவி வருகின்றன. இரு நாடுகளும் இந்தியா மீது திடீர் தாக்குதலை நடத்தலாம். ஆனால் ஒன்றிய அரசு மவுனமாக உள்ளது.

ஒன்றிய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கையை இதுவரை எடுக்கவில்லை. நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். உடனடியாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி பேசினார்.


Share this News:

Leave a Reply