குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பிரபல நடிகை போர்க்குரல்!

Share this News:

மும்பை (28 ஜன 2020): குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை நான் ஆதரிக்கவில்லை என்று பாலிவுட் நடிகை பூஜாபட் தெரிவித்துள்ளார்..

நாடு முழுவதும் ஆங்காங்கே குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தெற்கு மும்பையில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிரான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பாலிவுட் நடிகை பூஜாபட் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

நாம் அமைதியாக இருப்பது நம்மை காப்பாற்றாது. நாம் உரக்க குரல் எழுப்ப வேண்டும் என்பதை இப்போது மாணவர்கள் கற்றுத் தருகிறார்கள். மத்திய அரசாங்கம் நமது மக்களை இப்போது ஒன்றுபடுத்தியிருக்கிறது.

நமது கருத்துக்களுக்கு அரசு செவிசாய்க்கும் வரை நாம் இன்னும் உரக்க குரல் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். எதிர்ப்பு என்பதுதான் ஜனநாயகத்தில் சிறந்த தேசப்பற்று ஆகும். சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகிய எதையும் நான் ஆதரிக்கவில்லை. காரணம், அவை என் குடும்பத்தை பிளவுபடுத்துகிறது.

இவ்வாறு பூஜா பட் பேசினார்.


Share this News:

Leave a Reply