தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் வைத்த ஆப்பு!

Share this News:

புதுடெல்லி (13 பிப் 2020): தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்களது குற்றப் பின்னணி தொடா்பான தகவல்களைத் தோ்தல் ஆணையத்திடமும் பொது வெளியிலும் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமா்வு கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவு முறையாகக் கடைப்பிடிக்கப்படாததால், மத்திய அரசு, தோ்தல் ஆணையம் ஆகியவற்றின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளக் கோரி பாஜக தலைவரும் வழக்குரைஞருமான அஷ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுமீதான விசாரனையை நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வந்தது.

இதனை அடுத்து விசாரணையின் முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை, 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

நாளேடுகள், சமூக வலைத்தளங்களலும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும்.

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து 72 மணிநேரத்தில் தேர்தல் அணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிட குற்றப் பின்னணி உடையவர்களுக்கு வாய்ப்பு தந்தது ஏன் என்பதையும் அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


Share this News:

Leave a Reply