பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட பெண் – ஆவேசப்பட்ட உவைசி!

Share this News:

பெங்களூரு (20 பிப் 2020): சி ஏஏ எதிர்ப்பு பேரணியில் பெண் ஒருவர் பகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டதற்கு அசாதுத்தீன் உவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் குடியுரிமைசட்ட எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. இதில் அசாதுத்தீன் உவைசியும் கலந்து கொண்டார். அப்போது, அமுல்யா என்ற பெண் இந்துஸ்தான் ஜிந்தாபாத், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டார்.

இதனால் ஆவேசமடைந்த உவைசி, அந்த பெண் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் இவர் எங்கள் அணியில் உள்ளவர் அல்ல என்றும் உவைசி தெரிவித்தார்.

இந்நிலையில் பேரணி ஏற்பாட்டாளர்கள் அந்த பெண்ணை போலீசிடம் ஒப்படைத்தனர். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


Share this News:

Leave a Reply