என் மார்பில் சுட்டாலும் என் ஆதாரங்களை காட்ட மாட்டேன் – அசாதுத்தீன் உவைசி!

Share this News:

புதுடெல்லி (11 பிப் 2020): என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் என் குடியுரிமை ஆதாரங்களை காட்ட மாட்டேன் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கர்னூலில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட கூட்டத்தில் பேசிய உவைசி, “முஸ்லிம்களிடம் இருந்த மரணம் பயம் இப்போது நீங்கியிருக்கிறது. அதற்கு காரணம் பாஜகவின் வெறுப்பு பேச்சு. நான் பாஜகவினருக்கு கூறிக் கொள்கிறேன், முஸ்லிம்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளீர்கள். அதற்காக முஸ்லிம்கள் அஞ்சப்போவதில்லை. அவர்களுக்கு மரண பயம் இல்லை. அதற்காகவே உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.” என்றார்.

மேலும், “என் மார்பின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் என் ஆதாரங்களை காட்டப் போவதில்லை. ஆனால் இந்த நாட்டில்தான் இருப்பேன். என்னை இங்கிறுந்து ஒரு அங்குலம் கூட அப்புறப்படுத்த முடியாது” என்றார்.


Share this News:

Leave a Reply