இந்தியாவில் ஒமிக்ரான் பி எஃப் 7 மேலும் நால்வருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது!

Share this News:

கொல்கத்தா (05 ஜன 2023): ஓமிக்ரான் துணை வகை BF7 சீனாவில் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா இந்தியாவில் இன்று நான்கு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து மேற்கு வங்கத்திற்கு வந்த நான்கு பேருக்கு BF.7 உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் நான்கு பேரின் உடல் நிலை திருப்திகரமாக உள்ளது.இதன் மூலம் நாட்டில் பி.எப். உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 7 இல் இருந்து 9 ஆக அதிகரித்துள்ளது.

இந்த மாதத்தில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்ற மதிப்பீட்டின் அடிப்படையில், விமான நிலையங்கள் உட்பட சோதனை தொடரும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply