திருமணத்தில் பாட்டு, நடனம் இருந்தால் நிக்காஹ் நடத்தப்படாது – இஸ்லாமிய மத குருக்கள் முடிவு!

Share this News:

லக்னோ (26 டிச 2022): உத்தரபிரதேச இஸ்லாமிய மத அறிஞர்கள் திருமணத்தில் பாடல் மற்றும் நடனம் இருந்தால் நிக்காஹ் செய்து வைக்க மாட்டோம் என இஸ்லாமிய மத குருமார்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்ட உலமாக்கள் அறிஞர்கள் குழு இந்த முடிவை எடுத்துள்ளனர்.

பல இஸ்லாமிய மத குருமார்கள், மற்றும் தலைவர்களுடனான சந்திப்பின் முடிவில் காசி இ ஷஹர் மௌலானா ஆரிஃப் காசிமி இந்த முடிவை அறிவித்தார்.

இதுகுறித்து ஆரிஃப் காசிமி கூறுகையில், “திருமணத்தில் டிஜே, பாடல் அல்லது நடனம் இருந்தால் நிக்காஹ் செய்து வைக்க மாட்டோம். இவை எதுவும் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு சொந்தமானது அல்ல.

பணத்தை விரயம் செய்வது இஸ்லாத்தில் இல்லை. இஸ்லாமிய சமுதாயத்தில் ஊதாரித்தனம் மற்றும் ஆடம்பர பழக்கவழக்கங்களை ஒழிப்பதே இதன் நோக்கம்.

“திருமணத்தின் காரணமாக மணமக்களின் குடும்பம் பொருளாதார நெருக்கடியை சந்திக்கக்கூடாது” என்று ஆரிஃப் காசிமி கூறினார்.


Share this News:

Leave a Reply