நிதிஷ்குமார் திடீர் மாற்றம் – பாஜக கூட்டணிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்பு!

Share this News:

பாட்னா (13 ஜன 2020): குடியுரிமை சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தேவையில்லை என்றும் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளமை பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திருத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தும் பாஜக கூட்டணியில் உள்ள முதல் கட்சியாக ஜேடியு உருவெடுத்துள்ளது.

பீகார் சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் லல்லு யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மதம் சார்ந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து, முதல்வர் நிதிஷ் குமார் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply