நிர்மலா சீதாராமனின் அமைச்சர் பதவி பறிப்பு?

Share this News:

புதுடெல்லி (20 ஜன 2020): மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகவும், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பட்ஜெட்டுக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யபடலாம். அப்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அந்த பதவியிலிருந்து அவர் மாற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. புதிய அமைச்சராக பொறுப்பேற்று யார் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்த மத்திய அமைச்சரவை மாற்றத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதிமுக மற்றும் பாமகவுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டம் கூடவுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்ய உள்ளார். இந்த கூட்டம் முடிவடைந்ததும் மத்திய அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share this News:

Leave a Reply