என்ஐஏ வால் கைது செய்யப்பட்ட விசாரணை கைதி முஹம்மது அமீன் சிறையில் மரணம்!

Share this News:

புதுடெல்லி (09 அக் 2022): என்ஐஏ வால் கைதாகி சிறையில் இருந்த கேரள இளைஞர் முஹம்மது அமீன் டெல்லியில் உயிரிழந்தார்.

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த முஹம்மது அமீன், பெங்களூரில் மாணவராக இருந்தார்., ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக மார்ச் 2021 இல் என்ஐஏ முஹம்மது அமீனை கைது செய்தது.

முஹம்மது அமீன் மீது நீதிமன்றத்தில் 5000 பக்க குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்துள்ளது. அமீனுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில், கேரளா மற்றும் கர்நாடகாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடக தளங்கள் மூலம் அமீன் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தத்தைப் பரப்பி வருவதாகவும், புதிய நபர்களைச் சேர்ந்து ஐஎஸ் குறித்து பிரச்சாரம் மேற்கொண்டதாகவும் அமீன் மீது என்ஐஏ குற்றம் சாட்டியிருந்தது.


Share this News:

Leave a Reply