டெல்லி தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களித்த கட்சி ஆம் ஆத்மி!

Share this News:

புதுடெல்லி (09 பிப் 2020): நேற்று நடைபெற்ற டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கே முஸ்லிம்கள் அதிக சதவீதத்தில் வாக்களித்துள்ளனர்.

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மொத்தம் உள்ள 70 இடங்களில் அக்கட்சிக்கு 49 இடங்கள் வரை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டைம்ஸ் நவ் 44 இடங்கள் ஆம் ஆத்மிக்கும், 26 இடங்கள் பாஜகவுக்கும் கிடைக்கும் என்றும், நியூஸ் எக்ஸ் ஆம் ஆத்மிக்கு 53 – 57 வரையிலும், பாஜகவுக்கு 11 – 17 இடங்கள் வரையிலும் கிடைக்கும் என்று கணித்துள்ளது. அதேவேளை இந்தியா டுடே ஆம் ஆத்மி 63 இடங்களை கைபற்றும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையி எக்ஸிட் போல் முடிவுகளில் முஸ்லிம்களிடம் எடுத்த புள்ளி விவரங்களின்படி 69 சதவீதத்தினர் ஆம் ஆத்மிக்கே வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 15 சதவீதத்தினரும் 9 சதவீதத்தினர் பாஜகவுக்கும் வாக்களித்துள்ளனர்.

எனினும் தேர்தல் முடிவுகள் வந்த பிறகே முழு விவரங்கள் தெரியவரும்.


Share this News:

Leave a Reply