முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் கொலை செய்ய பாஜக கூட்டத்தில் சாமியார் அழைப்பு!

Share this News:

புதுடெல்லி (08 பிப் 2023): முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் கொலை செய்ய வேண்டும் என்று இந்துக்களுக்கு சாமியார் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை இந்துத்துவா அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சாமியாரின் கொலை வெறி உரை இணையங்களில் வைரலாகி வருகிறது.

பாஜகவின் ஹரியானா தலைவரும் கர்னிசேனா தலைவருமான சூரஜ் பால் அமுவும் சுதர்சன் டிவியின் தலைமை ஆசிரியர் சுரேஷ் சாவான்கேக்கு ஆதரவாக ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அந்த சாமியார் இவ்வாறான வெறுப்புப் பேச்சினை உதிர்த்தார்.

அப்போது பேசிய சாமியார், “பிரிட்டிஷார் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் பிரித்து ஆளச் சொன்னார்கள் . நீங்கள் (இந்துக்கள்) எப்போது முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் கொல்வீர்கள்?” என்றார்.

மேலும் அந்த சாமியார், இந்துக்களை வீட்டில் வாள்களையும் துப்பாக்கிகளையும் வைத்திருக்குமாறு அறிவுறுத்தினார் – “நீங்கள் ஒரு கையில் ஆயுதங்களையும், மற்றொரு கையில் வேதங்களையும் வைத்துக் கொள்ளுங்கள். நமது மதம், வேதங்கள், தாய்மார்கள் மற்றும் சகோதரிகளைத் தாக்குபவர்களை சுட்டுக் கொன்றுவிடுங்கள் என்றார்.

இவ்வாறு வன்முறையை தூண்டும் பேச்சு நடத்திய எவருக்கும் எதிராக டெல்லி காவல்துறை இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை என்று ஸ்க்ரோல் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.


Share this News:

Leave a Reply