இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் கைது!

Share this News:

ஜெய்ப்பூர்(30 டிச 2022): – ராஜஸ்தானில் 17 வயது சிறுமிக்கு ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சாமியார் சர்ஜுதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

நான்கு மாநிலங்களில் உள்ள ஐந்து ஆசிரமங்களின் தலைவரான சர்ஜுதாஸ், ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் உள்ள அவரது ஆசிரமத்தில் இருந்து போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறுமியை சர்ஜுதாஸ் துன்புறுத்தி வந்ததாக புகார் எழுந்துள்ளது.

முன்னதாக சிறுமியின் தாய் மீது ஆசிட் வீச்சு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆசிரமத்திற்கு வந்த சிறுமியை சர்ஜுதாஸ் பாலியல் சித்ரவதை செய்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை முதலில் தனது நண்பரிடம் தெரிவித்தார். பிறகு அம்மாவிடம் கூறியுள்ளார். பின்னர் போலீசாரை அணுகினார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

ஆன்மீகத் தலைவரான சர்ஜுதாஸுக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியிலும், உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் பில்வாராவிலும் ஆசிரமங்கள் உள்ளன.

கைது செய்யப்பட்ட பிறகு, சர்ஜுதாஸ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு, குற்றவாளி வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.


Share this News:

Leave a Reply