மாட்டிறைச்சி கடத்தியதாக ஆட்டோ ஓட்டுநர் கைது!

Share this News:

இந்தூர் (17 டிச 2022): மத்திய பிரதேசம் இந்தூரில் மாட்டிறைச்சி கடத்தியதாக ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது பசு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் ஆட்டோ ரிக்‌ஷாவில் கண்டெடுக்கப்பட்ட இறைச்சி மாட்டிறைச்சியா என்பதை சரிபார்க்க ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், வழக்குப் பதிவு செய்வதற்கு முன் காவல் நிலையத்திற்கு வந்த பாஜகவினர் ஆட்டோ ரிக்‌ஷா உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


Share this News:

Leave a Reply