மகாத்மா காந்தியின் நினைவு தினம் – சோனியா காந்தி, பிரதமர்,ஜனாதிபதி மரியாதை!

Share this News:

புதுடெல்லி (30 ஜன 2020): மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுவதையொட்டி, புது தில்லியின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்.

இந்திய முப்படை தளபதி விபின் ராவத், ராணுவ தலைமை தளபதி எம்எம் நரவனே, கடற்படை தலைமை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், விமானப் படை தலைமை தளபதி ஆர்கேஎஸ் படௌரியா ஆகியோர், மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

பாஜக மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானி மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.


Share this News:

Leave a Reply