உத்திர பிரதேசத்தில் போலீசார் அட்டூழியம் – போராட்டக்காரர்கள் மீது சித்ரவதை – வீடியோ!

Share this News:

லக்னோ (19 ஜன 2020): உத்திர பிரதேசத்தில் போலீசர் போராட்டக்காரர்கள் மீது அத்துமீறி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்

டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு , கடந்த ஒரு மாதமாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து உத்திர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெண்கள் பெருமளவில் போராட்டத்தில் குதித்தனர்.

இந்நிலையில் லக்னோ ஐகானிக் கடிகார கோபுரம் அருகில் பொதுமக்கள் நேற்று இரவு குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டபோது போலீசார் போராட்டக்காரர்களின் போர்வையை உருவி, அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுகளை உண்ணவிடாமல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

https://twitter.com/alok_pandey/status/1218772700321075201

எனினும் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறாதவரை இவ்விடத்தை விட்டு நகறப்போவதில்லை என்று போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இதற்கிடையே இச்சம்பவத்தை போலீஸ் மறுத்துள்ளதோடு, வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply