ஹய் டீ & நமஸ்தே ட்ரம்ப் – இல்திஜா முஃப்தி பரபரப்பு டிவீட்!

Share this News:

புதுடெல்லி (24 பிப் 2020): அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் மஹபூபா முஃப்தியின் மகள் பரபரப்பு ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வருகை புரிந்துள்ளார். இரு நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் டிரம்ப் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

விமானத்தில் இருந்து இறங்கிய டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்பை பிரதமர் மோடி வரவேற்றார்.டொனால்டு டிரம்பை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்

தொடர்ந்து டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் 150 அடி தொலைவுக்கு சிவப்பு கம்பளத்தில் நடந்து செல்ல இருபுறமும் இசையுடன் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரத்யேக கார் மூலம் டிரம்ப் அவரது மனைவி மெலனியா டிரம்ப் பிரதமர் மோடி ஆகியோர் சபர்மதி ஆசிரமம் வந்தடைந்தனர். சபர்மதி ஆசிரமத்தில் காந்தியின் உருவப்படத்திற்கு பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மரியாதை செலுத்தினர். தொடரந்து டிரம்ப் ஆசிரமத்தை பார்வையிட்டார். சபர்மதி ஆசிரமத்தின் பெருமைகளை டிரம்ப்பிற்கு பிரதமர் மோடி. எடுத்துரைத்தார்.

காந்தியடிகளின் ராட்டையை மனைவியோடு சேர்ந்து சுற்றி மகிழ்ந்தார் டிரம்ப். டொனால்டு டிரம்ப் சபர்மதி ஆசிரமத்தில் பார்வையாளர்களின் புத்தகத்தில் ‘எனது சிறந்த நண்பர் பிரதமர் மோடிக்கு … நன்றி, அற்புதமான வருகை என எழுதி கையெழுத்திட்டார்.

இந்நிலையில் ட்ரம்ப் வருகை மற்றும், சபர்மிதி ஆசிரமத்திற்கு சென்றது குறித்து இல்ஜிஜா முஃப்தி ட்வீட் செய்துள்ளார். அதில்.”ஹய் டீ & நமஸ்தே ட்ரம்ப் டெல்லி பற்றி எரிகிறது. காஷ்மீரிகளின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. ஆனால் காந்திஜியின் மரபுகள் வெளிநாட்டு பிரமுகர்களால் சபர்மிதி ஆசிரமத்தில் மட்டுமே நினைவு கூறப்படுகிறது. அவருடைய மதிப்புகள் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டுவிட்டன.” என்று இல்திஜா முஃப்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மஹபூபா முஃப்தி வீட்டுக் காவலில் உள்ள நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தை இத்திஜா முஃப்தி பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply