சினிமா பாணியில் சிறுவர்கள் சிறைபிடிப்பு – கொலை குற்றவாளி சுட்டுக் கொலை!

Share this News:

பரூக்காபாத் (31 ஜன 2020): உத்திர பிரதேசத்தில் 20 சிறுவர்களை சிறைபிடித்த கொலை குற்றவாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஃபருக்காபாத் அருகே உள்ள கசாரியா கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் பாதம். கொலை வழக்கில் தொடர்புடையவர், பிறந்த நாள் பார்டிக்காக நேற்று பிற்பகலில் சிறுவர்களை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.

பார்டிக்கு வந்த 20 சிறுவர்களை தனது வீட்டின் அடித்தளத்தில் அடைத்துவைத்து கதவை சாத்திக் கொண்ட அவர் துப்பாக்கியுடன் மிரட்டல் விடுத்தார். போலீசாருக்கு தகவல் சென்று அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியபோது வீட்டிற்குள் 30 கிலோ வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் சுபாஷ் பாதம் மிரட்டியுள்ளார். அதனால் கமாண்டோ படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

பின்னர் அவர் 6 முறை சுட்டதில் 3 காவலர்கள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். பின்னர் 8 மணி நேர போராட்டத்திற்கு பின்பு சுபாஷ் பாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் பிடியில் இருந்த 20 சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


Share this News:

Leave a Reply