4500 முஸ்லிம் வீடுகளை இடிக்க உத்தரவு – முஸ்லிம் பெண்கள் போராட்டம் – வீடியோ!

Share this News:

புதுடெல்லி (04 ஜன 2023): உத்தரகாண்டில் ஏறக்குறைய 4500 முஸ்லீம் வீடுகளை இடிக்கத் திட்டமிட்ட ஆட்சிக்கு எதிராக ஹல்த்வானியில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற உத்தரவிட்டதை அடுத்து, ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தெருக்களில் குவிந்தனர்.

கஃபுர் பஸ்தி என்று அழைக்கப்படும் ஹல்த்வானி ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ரயில்வே நிலத்தில் ஆக்கிரமிப்பாளர்களை” வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில், 78 ஏக்கர் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி, 4,365 கட்டிடங்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி கஃபுர் பஸ்தியில் வசிப்பவர்கள் வெளியேற ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் நகரத்தில் தெருக்களில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தாங்கள் வீடிழந்து, பள்ளி செல்லும் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதால் ஏராளமான பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கிடையே இப்பகுதியில் சுமார் 29 ஏக்கர் ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான மாஸ்டர் பிளான் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டக்காரர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளன.


Share this News:

Leave a Reply